லாவாய் சிறப்பு வெளியிடு,

பண்டைய குறுஞ்சி நாட்டின் தலைநகரமாக  விளங்கிய ஊர் சிறுகுடி . அக்காலத்தில் இங்குள்ள மக்களிடம் மிகவும் பிரிசித்தி பெற்ற வெள்ளி மலை முருகன் கோவில் 5 கி.மி தூரத்தில் அமைந்துள்ளது .அந்த கடவுளின் வழிபாட்டின் ஒரு பகுதி லவாய் என்ற வழிபாடு.ஒவ்வெரரு  வருடம் தை பூசத்திற்கு 30 தினங்களுக்கு முன்பாக இந்த லாவாய்  அமைக்கபடுகிறது .இது சிருகுடியின் எல்லா தெருவிலும்  லாவாய் அமைக்கப்படும் .இதை காய்ந்த துவரை செடியின் குடில் அமைத்து அதின் மையப்பகுதியல் சிறு மேடை அமைத்து அதில் முருகன் ,வள்ளி .


எங்கள் மொழியல் கிழவன் கிழவி என்று கூறுவும்.பொம்மை வைத்து  தினமும் மாலை 6 மணிக்கு அந்தந்த பகுதில் உள்ள சிறுவர் சிறுமி கும்மி அடித்து பாட்டு பாடி தினமும் அவர்கள் வீட்டில் உள்ள இரவு நேர  சாப்பாட்டை சிறிய பாத்திரத்தில் எடுத்து வருவார்கள் .லாவாயில் சைவ உணவு மட்டும் தான் கொண்டு வர வேண்டும் இதில் சுரங்க வீட்டில் முன்பாக தான் இந்த லாவாய் அமைக்கப்படும் .இரவு 7 to 8 தான் சாப்பாடு நேரம் .சாப்பிட்ட பின்பு ஆண்கள் கபடியும் பெண்கள் லேப் விளையாட்டு .அதில் பூப்பறிக்க வருகிறோம் என்று ஒரு பிரிவும் எதிர் அனினர் கை கோர்த்தபடி எந்த பூவை பறிக்கிறோம் என்று இவர்கள் அருகில் வந்து செல்வர்கள் .பதிலுக்கு அவர்கள் ஒரு பெயர் சொல்வார்கள் .எதிரனியும் ஒரு பெயர் சொல்வார்கள்அதன்பிறகு பெயர்கூரப்பட்ட இருவரும் மியாப்பகுதியல் வந்து ஒற்றைக்கையால் மற்றவரை எழுது பலப்பரீட்சை பார்ப்பார்கள் பலம் இழந்து தோல்வி அடைந்தவர் வெற்றிபெற்றவர் அனியில்  சேர்ந்துகொள்வர் இந்த விளையாட்டு இரவு 1  மணிவரை நடைபெறும். மேலும் நொண்டி .கொதிரை சப்ப .

திருடன் போலீஸ் என்று ஒளிந்து விளையடுவார்கள் தெருவெங்கும் கும்மிருட்டாக இருந்தாலும் இளங்கன்று பயமறியாது என்பதன் போருளுக்கேற்ப சுரங்க வீடுமுதல் பந்தடிபோட்டல் இங்கும் அங்கும் ஒளிந்து விளையாடுவார்கள் .நாங்கள் இந்த விளையாட்டெய் விலையாடுவதால் தெரு நாய்களுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கும் .பிறகு நேரமிருந்தால் அவர்களையும் ஒரு கை பார்போம் கல் எறிதல் நடக்கும் இரவு 1 மணிக்கு மேல் காலை 3 மணிவரை கொட்டும் பணியல் முருகன் பஜனை பாடல்கள் குருப்பாக லாவாயில் ஒக்காந்து பட்டு படுவோம் .

3 மணிக்குமேல் துங்கி காலை வழக்கம்போல் 9 மணிக்கு பள்ளிக்கு சென்றுவுடுவும்.இது தை மாதம் நடைபெறுவதால் எல்லார் வீட்டிலும் பச்சை மொச்சை கொளம்பு .மொச்சை பொரியல் என்று சுவையக வைத்துகொண்டு வருவார்கள் .அமைப்பாளர்கள் உள்ளிந்து
சாப்பாடுக்கு காரர்களுக்கு தெரியாமல் டேஸ்ட் பார்ப்பார்கள் மேலும் உள்ளிருப்பவர்கள் உள்ளே கேஸ் போடகுடாது அப்படிபோட்டல் அவர்களுக்கு சிரங்கு வரும் என்று கூறுவோம் .ஆனாலும் பச்சை மொச்சையின் மகிமையால் கூடத்தில் கேஸ் போடுவார்கள் அவர்களை விளையாட்டாக துரத்தியடிப்போம் . இது 1 மாதம் இதுபோன்று தினசரி நடக்கும் சிறுவர் சிறுமியர் ஆர்வமாக சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடுவார்கள் இடையல் தோழர் தோழிகள் சாப்பாட்டை பகிர்ந்து கொள்வார்கள் இது ஒற்றுமை இன் எடுத்துகாட்டாக இருக்கும் .30 நாள் முடிந்து தை பூசம் முடிந்தவுடன் முனால் காலை 4  மணிக்கு 5 மணிக்கு லவாய் குடிலை பிரித்து கட்டிக்கொண்டு ஊரணி கரையில் வைத்துவிடு கிழவன் கிழவியை ஊரனியல் குளிப்பாட்டி நாங்கள் அனைவரும் ஊரணியில் குதித்து குளித்துவிட்டு கரையேறி குடிலை நெருப்பு வைத்து எரித்துவிட்டு குளிர்கைந்துவிட்டு அருகில் உள்ள முத்தாலமன் கோவிலில் சாமிகும்ப்பிட்டு அவர் அவர் தன் வேலையெல் இரங்கிவிடுவர்கள் அந்தநாள் எங்களுக்கு வருத்தமான நாளகதெறியும் தை மாதம் ஒரு மாதம் ஜாலியாக இருப்போம் பூசத்தன்று சிலர் வந்து லவாய் பொங்கல் வைப்பார்கள் அப்படி வைத்து படையல் செய்து எல்லா குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள் அந்த சுவையும் தனி அந்த பொங்கல் வாங்குவதற்கு பிள்ளையார் கோவிலிந்து விளக்குமார்கு சியால் இணைக்கப்பட்ட அரச இலை தயார் செய்து கொண்டு ரெடி யாக இருப்போம் இன்று காலத்தால் இந்த சிறுவர் திருவிழா மறைந்து விட்டது.

 " மறக்க முடியுமா  ? மறக்க முடியுமா ? "


By
முத்துராமலிங்கம் ஆறுமுகம். 
சிவசங்கர் .J.K



AND
Logo
SWST