sengappallam நீங்கள் பார்ப்பது செங்கல்பள்ளம் .இது ஒருகாலத்தில் சிருகுடியின்  நீட்சல்குலமாக விளங்கியது .வருடம் முழுவதும் தண்ணீர்  இருக்கும் .இந்த ஊரில் பிறந்தவர்களிடம் நீச்சல் தெர்யுமா?என்று கேட்கமுடியாது .ஏனென்றல் இங்குள்ள குழந்தைகள் நடக்க ஆரம்பித்த உடன் தாய்மார்கள் செங்கல்பள்ளம் கூட்டிசென்று துணி துவைத்து பிள்ளைகளையும் குளிக்கவைத்து கூட்டிவருவர்கள் ஆதலால் அவர்களுக்கு நீச்சல் அடிப்பதை பார்த்து மூன்று வயதிலேயே நீச்சல் கற்றுக்கொள்வார்கள் கோடை விடுமுறை நாட்களில் மற்ற ஊர்களில் உள்ள சிறுவர்கள் அனைவர்க்கும் சிறுகுடி வருவதையே விரும்புவர்கள்.

 இந்த குளத்தில் நன்றாக ஆட்டம் போடலாம் சிறுவர்களிடையே நீச்சல் போட்டிநடக்கும் அக்கறை படித்துறை சென்று முதளில்வருவது யார் என்று போட்டி நடக்கும் இது பிள்ளைமார் சமுகத்தால் ஊருக்கு வழங்கபட்டுள்ளதாக கல்வெட்டுக்கள் உள்ளன கிழக்கு ,மேற்க்கு செட்டியார்தெரு பலாமரதுப்பட்டி தெரு அனைதுபகுதி மக்களும் குளிப்பதற்கும் துணி துவைப்பதட்க்கும் முழுக்க இந்த குலத்தையே நம்பி இருந்தார்கள் . 

இந்த குளத்தின் அருகில் ஒரு அரசமரம் இருந்தது அதன் கீழ் சுமைதாங்கிகள் ஒன்று இருந்தது மலைகலில்  விறகு வெட்டி கொண்டுவருபவர்கள் இங்குவிறகு கட்டை இறைக்கி வைத்துவிட்டு கை கால் அலம்பி இளைப்பாறி செல்வர்கள் இதன் அருகில் உரைக்கேணி ஒன்று உள்ளது இங்கு இருந்துதான் சிருகுடிக்கே குடிநீர் சப்ளை ஆகும் இந்த குளம் அருகில் இருப்பதால் கிணற்றில் தண்ணீர் ஊர்வதை பார்ப்பதே தனி அழகு ஆகும்.

 இதன் அருகில் மாமரம் ஒன்று உள்ளது அதில் கல் எரிந்து பலபேர் மண்டையை உடதிருக்கிறோம் இந்த மாங்காய்என் சுவையோ தனி ருசி அப்படி எல்லோருக்கும் பயன்பெற்ற செங்கல்பள்ளம் இன்றுவருடத்தில் ஒருமாதம் தண்ணீர் கிடப்பதே அரிதாக உள்ளது தற்சமயம் யாருக்கும் உபயோகமில்லாமல் இருந்து வருகிறது இது பிள்ளைமார் சமூக கட்டுப்பாட்டில் உள்ளது.




By

 முத்துராமலிங்கம் ஆறுமுகம். 


LoGoSWST