நன்றி மடல்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா, ஆலைகள் வைப்போம்," கல்விச்சாலைகள் வைப்போம்" என்றார் பாரதி
ஆலயம் கட்டுதல், பல நூறு குளங்கள் வெட்டுதல், அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல் இதைவிட, "சாலச் சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" .


இவை எல்லாம் சான்றோர்களின் வாக்கு. ஆனால் இன்று உயர்கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது .1978 பிறகு மெட்ரிக்பள்ளிகள் புழக்கடைபக்கமாக புகுந்து தோளில் ஏறி உட்கார்ந்து நடுத்தரமக்களின் இறக்கி வைக்க முடியாத சுமையாக மாறிவிட்டது. 1960-களில் ஒப்பிடுகையில் இப்பொலுது பல வசதிகள் உள்ள தனியார் பள்ளிகளில் பிள்ளைகளின் அறிவு ?தொலைனோக்கு பார்வை ,நீதிபோதனைகள் சமுதாயப்பார்வைகள் ,நியாயத்தராசுகள் இவைகளை மதிப்பிட முடியவில்லை.

ஒரு மாணாக்கருக்குத் தேவை உடுக்க உடை, உண்ண உணவு, படிக்க நோட்டு, புத்தகம், எழுதுகோல் இருக்க இருப்பிடம்,இது எப்பொலுது பூர்த்தி செய்யப்படுகிறதோ,அப்பொலுதுதான் அந்த மாணாக்கர் கவலையில்லாமல் ,தன்னுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டமுடியும் .இதில் அரசுப்பள்ளிகளில் உண்ண உணவு கொடுத்துவிடுகிறார்கள். இருக்க இருப்பிடம் அது பெற்றோரின் கடமை.படிக்க நோட்டு,புத்தகம்,பென்சில்,ரப்பர் இல்லாமல் கடந்த பல வருடமாக நாம் பிறந்த ,இந்த படித்த பள்ளியில் இப்படி ஒரு அவல நிலை இருக்கும் என்று நினைத்துபார்க்க முடியவில்லை.
  
நமது செவிக்கு இந்த தகவல் வந்தவுடன் இதற்கு ஒரு நல்ல தீர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமானதுதான்,நமது தொண்டு நிறுவனம். நம் முயற்சிக்கு பல நல் இதயங்களின் ஆசியும், பொருலுதவியும்,ஊக்கமும் கிடைத்து கடந்த 23/06/2011 அன்று நமது ஆரம்பப்பள்ளி மாணாக்கருக்கு நோட்,ரப்பர்,பென்சில்,ஷார்ப்பனர்,ஜாமெண்டரி பாக்ஃஸ்,உலக இந்திய ,தமிழ்நாடு வரைபடங்களை கொடுத்து அதை அவர்கள் வாங்கும்பொது அவர்கள் பெற்ற மகிழ்ச்சி அவர்களின் கண்களில் நன்றி உணர்ச்சி தலைமையாசிரியையின் ஆனந்த கண்ணீர்,பெற்றோர்களின் நெகிழ்ச்சியான நன்றி.இதை எப்படி விமர்சிப்பது ?

பெறுவதில் சுகமா, கொடுப்பதில் சுகமா என்பதில் கொடுத்து அதை அவர்கள் ஆனந்தமாய் பெறுவதில் உள்ள சுகம் உலகத்தில் வேறு இல்லை என்பதுதான் நமது எண்ணம்.

இதற்கு நிதி வழங்கியவர்களுக்கு"நன்றி",என்று எப்படி ஒற்றைச் சொல்லால் சொல்வது.

"இல்லாதோர்க்கு இயன்றதைச் செய்வோம்" 

இதுதான் எங்களின் நோக்கம்.

சிறப்பு வணக்கம்:

நடப்பாண்டில் ஈரோடு மாவட்ட ஆட்சிதலைவர் மதிப்பிற்குரிய ஆனந்தகுமார் அவர்கள் தனது மகளை அரசு துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்தார்கள்.

நன்றியுடன்

SRDT குழு உறுப்பினர்கள்